கேரளாவில் ரூ.3.25 கோடி ஹவாலா பணம் பறிமுதல் - இருவர் கைது

பெங்களூரில் இருந்து ரெயிலில் வந்த இருவரிடம் இருந்து கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் 3.25 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் ரூ.3.25 கோடி ஹவாலா பணம் பறிமுதல் - இருவர் கைது
Published on

திருவனந்தபுரம்:

பெங்களூரில் இருந்து யஷ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிலர் ஹவாலா பணத்தை கொண்டு செல்வதாக கேரள மாநில ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் கண்னூர் மாவட்டம் தலச்சேரி ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலில் வந்த  பயணிகளிடம் ரெயில்வே போலீசார் மற்றும் தலச்சேரி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரு பயணிகள் வைத்திருந்த மூன்று கைப்பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

3.25 கோடி ரூபாய் அளவிலான பணத்தை பறிமுதல் செய்த போலீசார் கோழிக்கோடு மாவட்டம், கொடுவல்லி பகுதியை சேர்ந்த ஹவாலா தரகர்களான முஹம்மது சாலிக்(26), இக்பால்(30) ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com