இந்தோனேசியா: கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் தீவிபத்து - 30 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் இன்று கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உள்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்தோனேசியா: கியாஸ் லைட்டர் தொழிற்சாலையில் தீவிபத்து - 30 பேர் பலி
Published on

ஜகர்தா:

இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள பின்ஜாய் மாவட்டத்துக்குட்பட்ட சம்பிரேஜோ என்ற கிராமத்தில் கியாஸ் லைட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் திடீரென்று பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. மறு வினாடி உள்ளே குவித்து வைக்கப்பட்டிருந்த கியாஸ் லைட்டர்கள் அனைத்தும் தீக்கோளமாக வெடித்து சிதறின.

இந்த விபத்தில் சிக்கி உடல் கருகி இறந்துகிடந்த குழந்தைகள் உள்பட 30 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com