பெரம்பலூரில் மது போதைக்காக ஸ்பிரிட் குடித்த 3 வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

பெரம்பலூரில் மதுபோதைக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காததால் போதைக்காக ஸ்பிரிட் குடித்த 3 இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் நேற்று பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் பகுதியில் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் இளைஞர்கள் 3 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து, இளைஞர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்த சூரி மகன் கார்த்திராஜா (24), பெரியார் சிலை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ் (34), சங்குப்பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் சதீஷ் (28) என்பதும், மது அருந்தும் பழக்கம் இருந்த இவர்களுக்கு மதுபானங்கள் கிடைக்காததால், மருந்தகங்களில் பயன்படுத்தும் வேதிப்பொருளான ஸ்பிரிட்டை குடித்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com