கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு தப்ப முயற்சி: மண்டபம் கடற்கரையில் 3 அகதிகள் கைது

கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு தப்ப முயற்சி: மண்டபம் கடற்கரையில் 3 அகதிகள் கைது

மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற 2 அகதிகளும், அவர்களுக்கு உதவிய மற்றொரு அகதியும் கைது செய்யப்பட்டனர்.
Published on

ராமநாதபுரம்:

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு அகதிகளாக இருப்பவர்கள் சிலர் அவ்வப்போது உரிய அனுமதி இல்லாமல் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சிப்பதும், இலங்கையில் இருந்து சிலர் அனுமதியின்றி வருவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

இதனை தடுக்க போலீசாரும், கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை தோணித்துறை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அருகே 2 இலங்கை அகதிகள் சந்தேகப்படும் வகையில் நிற்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரும் இலங்கையை சேர்ந்த பாஸ்கர், சாய்ஈசன் (25) என தெரியவந்தது. அகதிகளாக இந்தியா வந்த இவர்களில் சாய்ஈசன், சென்னையில் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கு மண்டபம் குஞ்ஞார் வலசையை சேர்ந்த பாஸ்கரன் (38) ஏற்பாடு செய்துள்ளார். அவர் அழைத்ததன்பேரில் மண்டபம் தோணித்துறை வந்ததாக பிடிபட்ட 2 பேரும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மண்டபம் போலஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். பாஸ்கரன், கரூர் அருகே ராயனூர் அகதிகள் முகாமில் இருந்தவர் ஆவார்.

X

Maalai Malar
www.maalaimalar.com