தென்னாப்பிரிக்கா: மிருக காட்சி சாலையில் இருந்து தப்பிய 3 சிங்கங்கள் சுட்டுக்கொலை

தென்னாப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து தப்பிய 3 சிங்கங்கள் சுட்டுக்கொல்லப்பட்டன.
தென்னாப்பிரிக்கா: மிருக காட்சி சாலையில் இருந்து தப்பிய 3 சிங்கங்கள் சுட்டுக்கொலை
Published on

ஜோகனஸ்பர்க்:

தென்னாப்பிரிக்காவில் ஜிம்பாப்வே மற்றும் மொசாம்பிக் நாடுகளின் எல்லையில் குருகர் பூங்கா மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, சிறுத்தை உள்ளிட்ட கொடிய வன விலங்குகள், பறவைகள் மற்றும் பாம்பு வகைகள் உள்ளன.

இங்கு சிங்கங்கள் மட்டும் 1500 உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மிருக காட்சி சாலையில் இருந்து 3 ஆண் சிங்கங்கள் தப்பி வெளியே ஓடிவிட்டன.

மிருககாட்சி சாலையை ஒட்டியுள்ள வறண்ட ஆற்று படுகைகள் மற்றும் சுவற்றின் ஓட்டை வழியே அவை வெளியேறியதாக தெரிகிறது. அவற்றை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் மிருக காட்சி சாலை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தப்பி ஓடிய சிங்கங்கள் விவசாயியின் மாட்டை அடித்து கொன்றன. அதை தொடர்ந்து சிங்கத்தை விவசாயி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மற்ற 2 சிங்கங்களும் காயத்துடன் தப்பின.

அவை ஆபத்தானவை என கருதிய மிருககாட்சி சாலை ஊழியர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். இதற்கிடையே புதரில் பதுங்கியிருந்த அவை சுட்டுக் கொல்லப்பட்டன, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 5 சிங்கங்கள் தப்பி விட்டன. அவற்றில் 4 சிங்கங்கள் பிடிப்பட்டது. மீதமுள்ள ஒரு சிங்கத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com