அமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் ஆலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். #US #Maryland #RiteAid
அமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் மேரிலான்ட் மாநிலத்தில் உள்ள ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் என்ற மருந்து உற்பத்தி ஆலை செயல்படுகிறது. உள்ளூர் நேரப்படி வியாழன் காலை அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளான்.

மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 1000 பணியாளர்கள் அங்கு இருந்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. போலீஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com