2-வது ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக 280 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி
சதம் அடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி
Published on

போர்ட் ஆப் ஸ்பெயின்:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த விராட்கோலி, ரோகித் சர்மா உடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதில் ரோகித் சர்மா 18 ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து வந்த ரிஷாப் பண்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய விராட்கோலி சதம் அடித்து அசத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக பிராத்வெய்ட் பந்தில் 120(125) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  

42.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. ஷிரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 71 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 279 ரன் எடுத்தது. 

பின்னர் 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com