2ஜி வழக்கு தீர்ப்பு: மு.க.ஸ்டாலினிடம் காங். தலைவர்கள் நேரில் வாழ்த்து

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால் மு.க.ஸ்டாலினிடம் காங். தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
2ஜி வழக்கு தீர்ப்பு: மு.க.ஸ்டாலினிடம் காங். தலைவர்கள் நேரில் வாழ்த்து
Published on

சென்னை:

2ஜி வழக்கில் இருந்து கனிமொழி எம்.பி., ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டது.

இதையடுத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தீர்ப்பு வெளியானதும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போனில் மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

இன்று முன்னாள் காங்கிராஸ் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com