இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ 2018

ஹூன்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. 2018 டெல்லி மோட்டார் விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ 2018
Published on

மாருதி சுசுகி ஆல்டோ மற்றும் ரெனால்ட் குவிட் மாடல்களுக்கு போட்டியாக ஹூன்டாய் நிறுவனம் விலை குறைந்த ஹேட்ச்பேக் கார் ஒன்றை வெளியிட இருக்கிறது. முந்தைய சான்ட்ரோ வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய ஹூன்டாய் சான்ட்ரோ வெளியிடப்பட இருக்கிறது.

சான்ட்ரோவிற்கு மாற்றாக ஹூன்டாய் நிறுவனம் வெளியிட்ட ஹூன்டாய் இயான் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. முந்தைய ஹூன்டாய் சான்ட்ரோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், புதிய மாடலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சான்ட்ரோ 2018 ஆட்டோ எக்ஸ்போ அல்லது டெல்லி மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த மாடல் சோதனை செய்யப்படுகிறது.   

சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மூடப்பட்டிருப்பதால் இந்த மாடல் குறித்த அதிகப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் முந்தைய மாடல் போன்றை டால்பாய் வடிவமைப்பை கொண்டிருக்கும் என்றும், பெரிய கிளாஸ் பேனல்கள், பின்புற ஜன்னல் மற்றும் சி-பில்லர் உள்ளிட்டவை பார்க்க ஹூன்டாய் i10 போன்றே காட்சியளிக்கிறது.

அலாய் வீல்களுக்கு மாற்றாக புதிய சான்ட்ரோவின் ஸ்டீல் ரிம்களை சுற்றி வீல் கேப்கள் வழங்கப்பட்டிருப்பதால் இந்த காரின் விலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் புதிய சான்ட்ரோ 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆட்டோமேடிக் மற்றும் AMT பதிப்புகளில் 2018 சான்ட்ரோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூன்டாய் சான்ட்ரோ 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என்றும் இதன் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஹூன்டாய் மாடல்களை போன்று புதிய சான்ட்ரோவிலும் அதிகப்படியான அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com