விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி தொழிற்சங்கங்கள் மறியல் - 200 பேர் கைது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி தொழிற்சங்கங்கள் மறியல் - 200 பேர் கைது
Published on

புதுச்சேரி:

புதுவை ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி..சிடி.யூ. ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று ஊர்வலம் மறியல் போராட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர் சட்டங்களை தன்னிச்சையாக திருத்த கூடாது என்ற 12 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் நரசிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி. செயல் தலைவர் நாரா.கலைநாதன், தலைவர் அபிஷேகம், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், முருகன், ஐ.என்.டி.யூ.சி. ஞானசேகர், சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. புருசோத்தமன், பழனி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ஊர்வலம் அண்ணாசாலை வழியாக காமராஜர் சாலை சந்திப்பை அடைந்தது. அங்கு அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com