பிலிப்பைன்சில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர்.
மீட்பு பணிகளில் போலீசார்
மீட்பு பணிகளில் போலீசார்
Published on

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு கும்பல் லாரி ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அந்த லாரியில் குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com