

ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் உள்ள அக்னூர் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் செக்டார்களில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.