சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Published on

அரியாங்குப்பம்:

புதுவை நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி படகு குழாமில் படகு சவாரி செய்ய கூட்டம் அலை மோதுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஆனந்த் என்ற அலெக்ஸ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உதயசெல்வன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com