இலங்கையில் தமிழக மீனவர்கள் 19 பேருக்கு 12-ம் தேதி வரை சிறைக்காவல்

இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை வரும் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #indianfishermen #custody
இலங்கையில் தமிழக மீனவர்கள் 19 பேருக்கு 12-ம் தேதி வரை சிறைக்காவல்
Published on

கொழும்பு:

தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்யது வருகின்றனர்.

மேலும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்களின் வலைகளை நாசப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைகளில் பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறைபிடிக்கப்படும் படகுகளின் அளவுக்கேற்ப 2 முதல் 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டின் வடபகுதி கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி 19 தமிழக மீனவர்களை இலங்கை கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் அனைவரும் இன்று வவுனியா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

வரும் 12-ம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #tamilnews #indianfishermen #custody

X

Maalai Malar
www.maalaimalar.com