ஆந்திர கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மீட்பு

படகு பழுதானதை அடுத்து ஆந்திர கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
ஆந்திர கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மீட்பு
Published on

விசாகப்பட்டணம்:

ஆந்திர மாநில கடல் பகுதியில் மோகன்ராஜ் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகு கடல் அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவல் கிடைத்த காக்கிநாடா கடலோர பாதுகாப்பு படையினர் மீட்பு கப்பலில் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த படகு நாகப்பட்டினத்தில் இருந்து 15 மீனவர்களுடன் 16-ந் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றதும், படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அலையில் சிக்கியதும் தெரிந்தது.

கடலோர காவல்படையினர் அந்த படகில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. அதனால் தமிழக மீனவர்களின் படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். 15 தமிழக மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த தகவலை காக்கிநாடா கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com