இந்தியா-பிரிட்டன் இடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சி இன்று தொடங்கியது

இந்தியா-பிரிட்டன் ராணுவத்திற்கு இடையேயான கூட்டுப்பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் இன்று தொடங்கியது.
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள ராணுவ கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பதற்காக பிரிட்டன் ராணுவ வீரர்கள் இந்தியா வந்தடைந்தனர். இந்த கூட்டுப்பயிற்சி 'அஜெய வாரியர் - 2017' என்று அழைக்கப்படுகிறது.


இரண்டு வாரம் நடைபெற உள்ள இந்த கூட்டுப்பயிற்சி இன்று தொடங்கியது. இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சார்பாக 120 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இரு நாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
   
இது இந்தியா-பிரிட்டன் பங்குபெறும் மூன்றாவது கூட்டுப்பயிற்சியாகும். கடந்த 2013 ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெல்கயமில் நடைபெற்றது. அதே போல் 2015 ம் ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவம் இங்கிலாந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com