ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் - 14 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். #AfghanSoldiers #Talibanattack
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் - 14 வீரர்கள் பலி
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com