பீகாரில் கங்கை நதியில் மூழ்கி 9 பேர் பலி

பீகாரில் கங்கை நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்க நதியில் குதித்த 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
பீகாரில் கங்கை நதியில் மூழ்கி 9 பேர் பலி
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள மாஸ்டனா காட் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சிறுவர்கள், பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 11 பேர் வந்தனர்.

அவர்கள் அங்கு கங்கை நதியையொட்டி உள்ள சிறிய மலையில் ஏறி கேளிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் கால் இடறி நதியில் விழுந்தான்.

இதையடுத்து அவனை காப்பாற்றுவதற்காக அவனுடன் வந்திருந்த அனைவரும் நதியில் குதித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களில் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 2 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மற்றொரு சம்பவமாக சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பாக்மதி ஆற்றில் 12 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதில் 3 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com