

போபால்:
மத்திய பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில், பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மந்த்சவுர் மாவட்டத்தில் உள்ள தமது சொந்த கிராமமான காந்தாரியாவுக்கு பக்தர்கள் திரும்பி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த விபத்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 6 பெண்கள், 4 குழந்தைகள் அடங்குவர். விபத்துக்குள்ளான டிராக்டரில் சுமார் 35 பயணம் செய்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சன்வாரியா சேது கோவிலுக்கு சென்று அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கஞ்சுடி என்ற கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.