ராஜஸ்தானில் கோர விபத்து - புதுமண தம்பதியர் உள்பட 11 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே இன்று கார் மீது லாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதியர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உருக்குலைந்த லாரி
விபத்தில் உருக்குலைந்த லாரி
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தார் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் ஒரு காரில் இன்று ஜோத்பூர் நகரின் அருகேயுள்ள பாபா ராம்டியோ ஆலயத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர்.

ஷேகார் என்ற பகுதியில் உள்ள சோயின்ட்டாரா கிராமம் வழியாக வந்தபோது எதிர் திசையில் வந்த லாரி அவர்கள் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் புதுமண தம்பதியர் விக்ரம் - சீதா மற்றும் குழந்தைகள், பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com