10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை: சத்தீஸ்கர் அரசுக்கு ஸ்மிருதி இரானி பாராட்டு

பத்து நாளில் 10,000 கழிப்பறைகள் கட்டி சாதனை படைத்துள்ள சத்தீஸ்கர் மாநில அரசுக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
10 நாளில் 10,000 கழிப்பறை கட்டி சாதனை: சத்தீஸ்கர் அரசுக்கு ஸ்மிருதி இரானி பாராட்டு
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

எனது அரசியல் வாழ்க்கையில் 10 நாள்களில் 10,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை முதல் முதலாக காண்கிறேன்.

இதற்காக ஒத்துழைப்பு நல்கிய உள்ளூர் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது என மகாத்மா காந்தி கூறுவது வழக்கம். அப்படிப்பட்ட கிராமங்களில் தூய்மையகவும், சுத்தமாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த முதல் மந்திரி ராமன் சிங்கிற்கு

நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான பணிகளை பார்வையிட்டார்.  

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 7-ம் தேதி இந்த கிராமத்தில் கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது. பத்து நாட்களுக்குள் இங்கு 10,000 கழிப்பறைகள் கட்டப்பட்டு விட்டது. இதைதொடர்ந்து, அடுத்த மாதத்துக்குள் சுற்றியுள்ள 91 பஞ்சாயத்துகளிலும் கழிப்பறைகள் கட்டி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com