10 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.40 ஆயிரம் பாக்கி கேட்ட வங்கி

திருச்சி தில்லைநகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.40 ஆயிரம் பணம் கேட்ட வங்கி அதிகாரிகள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.40 ஆயிரம் பாக்கி கேட்ட வங்கி
Published on

திருச்சி:

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது45). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பெற்று இருந்தார். ஆனால் பிறகு சில மாதங்கள் கிரெடிட் கார்டு சேவையை நிறுத்தி விட்டார். அதிலிருந்து பொருட்கள் வாங்குவதையோ, பயன் படுத்துவதையோ நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குழு முன்பு வங்கி சார்பில்  கார்த்திகேயனுக்கு  கிரெடிட் கார்டு பாக்கி ரூ.40 அயிரத்தை செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வந்தது. இதுகுறித்து கார்த்திகேயன் தில்லை நகர் வங்கிக்கு சென்று விளக்கம் கேட்டார். அப்போது  அங்கிருந்த வங்கி ஊழியர் கணேசன் கார்த்திகேயனை  பணத்தை கட்டுமாறு கூறி, தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து கார்த்திகேயன் தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வங்கி ஊழியர் கணேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com