ஆப்கானிஸ்தான்: மினி பஸ் மீது தலிபான்கள் தாக்குதல் - 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் மினி பஸ் மீது இன்று தலிபான்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.
தாக்குதலில் உருக்குலைந்த மினி பஸ்
தாக்குதலில் உருக்குலைந்த மினி பஸ்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்துக்குட்பட்ட ஜலாலாபாத் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான ஒரு மினி பஸ் சில பயணிகளுடன் இன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, சாலையோரத்தில் ஒரு ரிக்‌ஷாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகள் வெடித்து சிதறின. தலிபான்கள் பயங்கரவாதிகள் நடத்தியதாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.

காயமடைந்த 27 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com