அமெரிக்காவில் விமான நிலைய கட்டிடத்தில் மோதி தீப்பிடித்த விமானம்- 10 பேர் பலி

அமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
விமானம் மோதியதால் சேதமடைந்த கட்டிடம்
விமானம் மோதியதால் சேதமடைந்த கட்டிடம்
Published on

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே உள்ள அடிசன் விமான நிலையத்தில் இருந்து, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட அந்த சிறிய ரக விமானம், ரன்வேயில் ஓடி மேலே எழும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் திரும்பி, விமான நிலைய ஹேங்கர் மீது மோதியது.

பின்னர் சிறிது தொலைவு சென்று தரையில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com