ஜியோ அறிமுகம் செய்துள்ள 2 புதிய வொர்க் ஃபிரம் ஹோம் ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோவின் இந்த புதிய திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
ஜியோ
ஜியோ
Published on

ஜியோ நிறுவனம் இரண்டு புதிய வொர்க் ஃபிரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள்

ரூ. 2,879 மற்றும் ரூ. 2,999 விலையில் கிடைக்கின்றன.

இதன்படி ஜியோவின் ரூ.2879 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு  கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 730ஜிபி ஆகும். தினசரி எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.

மற்றொரு திட்டமான ரூ.2999-ல் தினம் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 912.5 ஜிபி ஆகும். எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.

ஜியோவின் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com