காமன்வெல்த் ஜூடோ போட்டி - இந்தியாவின் துலிகா மான் வெள்ளி வென்றார்

ஜூடோ பெண்களுக்கான 78 கிலோ பிரிவில் துலிகா மான் வெள்ளி வென்றார்.இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
துலிகா மான்
துலிகா மான்
Published on

பர்மிங்காம்:

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.

6-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கத்துக்கான சுற்றில் இன்று விளையாடினார்.

இந்த போட்டியில் துலிகா மான், ஸ்காட்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்தார். இதன்மூலம் துலிகா மான் வெள்ளி வென்றார்.

இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com