காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி - இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது

பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
தங்கம் வென்ற சாத்விக், சிராக் ஷெட்டி
தங்கம் வென்ற சாத்விக், சிராக் ஷெட்டி
Published on

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com