காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - 2 தங்கப்பதக்கம் வென்றது இந்தியா

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றது.இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
நீத்து கங்காஸ்
நீத்து கங்காஸ்
Published on

பர்மிங்காம்:

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com