ருசியான சத்தான காய்கறி பொங்கல்

வெண் பொங்கல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்று காய்கறிகள் சேர்த்து சத்தான ருசியான பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ருசியான சத்தான காய்கறி பொங்கல்
Published on

பச்சரிசி - அரை கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வெங்காயம் - 1
பிடித்தமான காய்கறிகள் - 1 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள், நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
மிளகு, சீரகம் - சிறிதளவு
ஏலக்காய், பட்டை - சிறிதளவு

எண்ணெய் - தேவைக்கு

வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

பச்சை பட்டாணியை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

அரிசி, பருப்பை நீரில் கழுவி போதுமான அளவு நீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள்.

ஓரளவு வெந்ததும் பெருங்காயத்தூள், நெய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

பின்னர் காய்கறிகளை கொட்டி, உப்பு, பச்சை பட்டாணி சேர்த்து வதக்குங்கள்.

காய்கறிகள் நன்கு வெந்ததும் பொங்கலில் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

ருசியான காய்கறி பொங்கல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com