சத்தான வரகு அரிசி கேரட் சாதம்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி கேரட் வைத்து கேரட் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான வரகு அரிசி கேரட் சாதம்
Published on

தேவையான பொருட்கள் :

கேரட் - 4

முந்திரி - தேவையான அளவு

உதிரியாக வடித்த வரகு அரிசி சாதம் - 2 கப்

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 4

எண்ணெய் - 6 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு (வெட்டியது)

செய்முறை :

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும்.

கேரட் நன்றாக வெந்த பின்னர் வேக வைத்த வரகு அரிசியை அதில் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

சத்தான சுவையான வரகு அரிசி கேரட் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com