சுவையான திணைஅரிசி காய்கறி உப்புமா

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை அரிசி, காய்கறி சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான திணைஅரிசி காய்கறி உப்புமா
Published on

திணை அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1 கைப்பிடி
மிளகு சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
காய்கறிக் கலவை - 1 கப் ( கேரட், பீன்ஸ், பட்டாணி )
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

திணை அரிசியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

அனைத்தும் நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவையான திணைஅரிசி காய்கறி உப்புமா ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com