உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பாதாம் பால்

காலையில் கேழ்வரகு பாதாம் பால் குடித்தால் உடலுக்கு வலு கிடைப்பதுடன் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
உடலுக்கு வலுசேர்க்கும் கேழ்வரகு பாதாம் பால்
Published on

கேழ்வரகு பால் - 2 கப்,
வெல்லம் அல்லது கருப்பட்டி (பொடித்தது) - அரை கப்,
பாதாம் (ஊறவைத்து அரைத்தது) - 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
சுக்குப்பொடி - துளி.

செய்முறை :

கேழ்வரகை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்துப் பால் எடுக்கவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கேழ்வரகு பால் சேர்த்து, அடி பிடிக்காமல் கரண்டியால் நன்கு கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பால் கொதித்து சற்று கெட்டியாக வரும்போது வெல்லம் அல்லது கருப்பட்டி, அரைத்த பாதாம் விழுது, சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இளம் சூட்டில் பரிமாறவும்.

சூப்பரான கேழ்வரகு பாதாம் பால் ரெடி.

X

Maalai Malar
www.maalaimalar.com