சூப்பரான மதிய உணவு புளிச்ச கீரை சாதம்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று சூப்பரான புளிச்ச கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான மதிய உணவு புளிச்ச கீரை சாதம்
Published on

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க :

வெங்காயம் - இரண்டு
பூண்டு - பத்து பல்
மிளகு - ஒரு ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 6
புளிச்ச கீரை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்

* ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். (புளிச்ச கீரை என்பதால் உப்பு கொஞ்சம் அளவாக’ போடவும்)

* கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான புளிச்ச கீரை சாதம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com