சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சிறுதானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வகையில் இன்று சிறுதானிய காய்கறி இட்லி செய்முறையை பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி
Published on

வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) - ஒரு கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
பீன்ஸ் - 10,
பச்சைமிளகாய் - 3
கேரட் - 1
பட்டாணி - அரை கப்
கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் - தேவையான அளவு

செய்முறை :

* சிறுதானிய குருணைகளை 1 மணி நேரம் ஊறவிடவும்.

* கேரட்டை துருவிக்கொள்ளவும்.

* கொத்தமல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).

* பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.

* இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com