சத்தான கம்பு முடக்கத்தான் அடை

காலை உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று கம்பு, முடக்கத்தான் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான கம்பு முடக்கத்தான் அடை
Published on

முடக்கத்தன் கீரை - ஒரு கப்,
கம்பு - 2 கப்,
உளுந்து - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 4,
இஞ்சி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கம்பு, உளுந்தை தனித்தனியாக ஊற வைக்கவும்.

பிறகு களைந்து கீரை, சீரகம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

மாவு புளித்த பிறகு வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை காய வைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு வேக விட்டு எடுக்கவும்.

சத்தான கம்பு முடக்கத்தான் அடை ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com