

உதிர்த்த இடியாப்பம் - 1 கப்
தக்காளி-1
பெரிய வெங்காயம்-1
இஞ்சி- சிறுதுண்டு
பூண்டு- 2 பல்
பச்சை மிளகாய்-2
தேங்காய்- சிறுதுண்டு
தாளிக்க - பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
நெய்-2 டீஸ்பூன்
எலுமிச்சம்பழம்- அரை மூடி
தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றை லேசாக நீர் தெளித்து, மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிரிஞ்சி இலை, சோம்பு, பட்டை போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலையைப்
போடவும். அரைத்த விழுதைப் போட்டு, வாசம் போகும் வரை இளந்தீயில் கிண்டவும். நன்கு வெந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கிண்டுங்கள்.
விழுது போல எல்லாம் சேர்ந்து வெந்தபின், இடியாப்பத்தைக் கொட்டி நெய் சேர்த்துக் கிளறவும். கடைசியாக எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிட்டு கிளறி உபயோகிக்கலாம்.
இது வெங்காய தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட்டால் பிரியாணி போல இருக்கும். விரும்பினால் கேரட், பட்டாணி, காலிபிளவரை சிறு துண்டுகளாக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து கலந்துகொள்ளலாம்.