சத்து நிறைந்த சோள ரவை புட்டு

சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையை வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்து நிறைந்த சோள ரவை புட்டு
Published on

சோளக்குருணை - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
தேங்காய்த்துருவல் - 3/4 கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்

நெய் - சிறிது

முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

சுவையான சோள ரவை புட்டு தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com