மாலை நேர ஸ்நாக்ஸ் மீன் கட்லெட்

மீனை சற்று வித்தியாசமாக கட்லெட் போல் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், மீன் பிடிக்காத குழந்தைகளும் அவற்றை சுவைத்து சாப்பிடுவர்.
மீன் கட்லெட்
மீன் கட்லெட்
Published on

தேவையான பொருட்கள் :

துண்டு மீன் - 300 கிராம்

உருளைக்கிழங்கு - 3

கேரட் - 1

வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை - 2 டீஸ்பூன்

முட்டை - 2

பிரெட் தூள் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

மீனை நன்கு கழுவி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, உதிர்த்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கையும் வேக வைத்து, தோலை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்.

கேரட்டை துருவிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, மீன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வதங்கியதும், அதில் உருளைக்கிழங்கு, கேரட் போட்டு வதக்கவும்.

பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு பிரட்டி, இறக்கி விடவும்.

இந்த கலவையை அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, பச்சை வாசனை போகும் வரை வதக்கினால் போதும்.

பின்னர் இதனை கட்லெட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய வைக்க வேண்டும்.

எண்ணெயானது காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லேட்டை, முட்டை கலவையில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி உடனே எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான மீன் கட்லெட் ரெடி!!!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com