தசரா

ஶ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “தசரா” படத்தின் முன்னோட்டம்.
தசரா படத்தின் போஸ்டர்
தசரா படத்தின் போஸ்டர்
Published on

நடிகர் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தசரா’ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

சந்தோஷ் நாராயணனின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com