காமன்வெல்த் போட்டி - ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜோஷ்னா சின்னப்பா
ஜோஷ்னா சின்னப்பா
Published on

பர்மிங்காம்:

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com