வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஹர்திக் பாண்டியா.. Confuse ஆன டிஸ்னி - வைரலாகும் படங்கள்

டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.
வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் ஹர்திக் பாண்டியா.. Confuse ஆன டிஸ்னி - வைரலாகும் படங்கள்
Published on

டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.

இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com