முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Zebronics-ன் டவர் ஸ்பீக்கர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

ZEB-BT800RUF-ஆனது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.வயர் கனெக்ஷன் இல்லாமல் நேரடியாக ப்ளூடூத் மூலமாக இந்த ஸ்பீக்கரில் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Zebronics-ன் டவர் ஸ்பீக்கர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
Published on

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் லைஃப் ஸ்டைல் ஆக்ஸஸரீஸ் பிராண்டான Zebronics, தற்போது மேட்-இன்-இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட டவர் ஸ்பீக்கரான ZEB-BT800RUF-ஐ அறிமுகம் செய்துள்ளது. அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டவர் ஸ்பீக்கரான இது வயருடன் கூடிய மைக்குடன் விற்பனைக்கு வருகிறது. ZEB-BT800RUF-ஆனது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாகும்.

ZEB-BT800RUF டவர் ஸ்பீக்கரானது, வீட்டில் நடக்கக்கூடிய பார்ட்டிகள் மற்றும் சந்திப்புகளுக்கு மிகவும் பொருத்தமானது. இதன் குறைந்தபட்ச வடிவமைப்பு, சிறிதான அளவு இதனை அறையின் எந்த பகுதிக்கும் தூக்கிச் செல்லும் அளவுக்கு போதுமானதாக உள்ளது. இது கச்சிதமான அளவுடன் அழகாகவும் இருப்பதால் அறையில் இருக்கும் அலங்காரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.

இந்த டவர் ஸ்பீக்கரானது இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு ஸப்வூஃப்பரிரை மேம்பட்ட இசை தரத்தை அளிப்பதற்காக கொண்டுள்ளது. மேம்பட்ட இசை அனுபவத்திற்காக இந்த டவர் ஸ்பீக்கரில் இரண்டு 3 இன்ச் ஃபுல் ரேஞ்ச் டிரைவர் & 5.3 இன்ச் ஸப்வூஃப்பர் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரில் அதிக கனெக்டிவிட்டி வசதிகளுடன் வருவதால் உங்களால் உங்களது இசையினை வயர் கனெக்ஷன் இல்லாமல் நேரடியாக ப்ளூடூத் மூலமாக ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

USB/AUX போன்ற இன்புட் ஆப்ஷன்களுடன் வரக்கூடிய இந்த ஸ்பீக்கரானது ஒரு பிள்ட்-இன் FM ரேடியோவினையும் கொண்டுள்ளது. இந்த தயாரிப்பின் வெளியீட்டு விழாவில், Zebronics-இன் இயக்குனரான திரு. பிரதீப் தோஷி பேசுகையில், "இந்தியாவில் சிறந்த தரமான, உயர்தரமான ஒலிசாதன தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களது ZEB-BT800RUF டவர் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

இது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளான "உள்ளூர் மக்களுக்கான குரல்" மற்றும் வேகமாக வளர்ந்து வரும் "ஆத்மநிர்பார் பாரத்" ஆகியவைற்றுடன் ஒத்துப்போகிறது. அன்புடன் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். ZEB-BT800RUF-ஆனது Amazon.in-இல் ஆஃப்பர் விலையில் ரூ. 5,099-க்கு கிடைக்கிறது" என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com