குறுகிய காலத்திற்கு வாங்கிக் கொள்ளுங்கள் - நத்திங் இயர் (2) சிறப்பு விற்பனை அறிவிப்பு!

நத்திங் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் இயர் (2) மாடல் இந்தியாவில் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
குறுகிய காலத்திற்கு வாங்கிக் கொள்ளுங்கள் - நத்திங் இயர் (2) சிறப்பு விற்பனை அறிவிப்பு!
Published on

லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இரண்டாவது தலைமுறை இயர் (2) இயர்பட்ஸ்-ஐ இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த இயர்பட்ஸ்-க்கான குறுகிய கால விற்பனையை நத்திங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

குறுகிய கால விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைத்தளங்களில் நாளை (மார்ச் 25) மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. இதுதவிர மார்ச் 28 ஆம் தேதி இதன் விற்பனை துவங்க இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் அதன் முந்தைய மாடலை போன்றே டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதுதவிர இந்த மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நத்திங் இயர் (2) மாடலில் உள்ள 11.6mm கஸ்டம் டிரைவர், புதிய டூயல் சேம்பர் டிசைன் ஒட்டுமொத்த சவுண்ட் தரத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் அதிகபட்சம் 40db நாய்ஸ் ரிடக்ஷன், ஸ்மார்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், மேம்பட்ட விண்ட் ப்ரூஃH் மற்று்ம கிரவுட் ப்ரூஃப் க்ளியர் வாய்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த வாரம் துவங்க இருக்கும் விற்பனைக்கு முன்பே நத்திங் இயர் (2) மாடலை வாங்க விரும்புவோர் நாளைய சிறப்பு விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய நத்திங் இயர் (2) மாடலின் விலை இந்தியாவில் ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com