M4 சிப்செட், மேம்பட்ட RAM உடன் புது ஐபேட் ஏர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா..?

ஆப்பிள் ஐபேட் ஏர் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ஏர் 4 நிறங்களில் கிடைக்கிறது.
M4 சிப்செட், மேம்பட்ட RAM உடன் புது ஐபேட் ஏர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா..?
Published on

ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 17e மாடலுடன், ஐபேட் ஏர்-இன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட M3 சிப் கொண்ட மாடலுக்குப் பதிலாக. புதிய M4 சிப் கொண்ட ஐபேட் ஏர் இந்தியாவில் ரூ.64,900 விலையில் தொடங்குகிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் மேம்படுத்தப்பட்ட RAM உடன் வருகிறது.

புதிய ஐபேட் ஏர் மாடலிலும் 11-இன்ச் மற்றும் 13-இன்ச் அளவுகளில் லிக்விட் ரெடினா எல்.சி.டி. பேனலாகவே வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பென்சிலை தனித்தனியாக விற்கிறது. ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ.11,900 என்றும் 11-இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ.26,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:

M4 ஐபேட் ஏர் 11-இன்ச் வைபை மாடல் ரூ.64,900

M4 ஐபேட் ேர் 13-இன்ச் வைபை மாடல் ரூ.84,900

M4 ஐபேட் ஏர் 11-இன்ச் வைபை + செல்லுலார் மாடல் ரூ.79,900

M4 ஐபேட் ஏர் 13-இன்ச் வைபை + செல்லுலார் மாடல் ரூ.99,900

புதிய M4 சிப் கொண்ட ஐபேட் ஏர் மாடலுக்கான முன்பதிவுகள் மார்ச் 4-ஆம் தேதி தொடங்குகிறது. விற்பனை மார்ச் 11-ஆம் தேதி தொடங்குகிறது. முந்தைய M3 சிப் கொண்ட ஐபேட் ஏர் 11-இன்ச் வைபை மாடலுக்கு ரூ.59,900 என்றும் 13-இன்ச் வைபை மாடல் ரூ.79,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் புளூ, பர்ப்பிள், ஸ்டார்லைட் மற்றும் ஸ்பேஸ் கிரே என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com