ரூ. 12,999 விலையில் புதிய ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் - இவ்வளவு அம்சங்களா?

ஐஃபால்கன் பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டுள்ளது. புதிய ஐஃபால்கன் ஆண்ட்ராய்டு டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரூ. 12,999 விலையில் புதிய ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் - இவ்வளவு அம்சங்களா?
Published on

டிசிஎல் நிறுவனத்தின் ஐஃபால்கன் பிராண்டு இந்திய சந்தையில் புதிதாக 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மூன்று புறமும் பெசல் லெஸ் டிசைன், வைடு வியூவிங் அனுபவம் வழங்குகிறது.

மேலும் இதில் HDR, டைனமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் அல்காரிதம், 24 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட் கோர் 64-பிட் பிராசஸர், G31MP2 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.

ஐஃபால்கன் S53 அம்சங்கள்:

32 இன்ச் 1366x768 பிக்சல் FHD LED ஸ்கிரீன், HDR 10

குவாட்கோர் 64-பிட் பிராசஸர்

G31MP2 GPU

1 ஜிபி ரேம்

8 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு டிவி 11

வாய்ஸ் ரிமோட்

வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.0

2x HMDI 2.0 (1xARC), 1x USB, S/PDIF

AV இன்புட், 1x ஈத்தர்நெட்

24 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

டால்பி ஆடியோ

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஐஃபால்கன் S53 32 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த டிவி வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி சலுகை, அதிகபட்சம் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com