ஏழு மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட டிசோ இயர்பட்ஸ் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டு டிசோ அக்சஸரீக்கள் விற்பனையில் வேகமாக வளர்ந்து வருகிறது. டிசோ பிராண்டின் புது இயர்பட்ஸ் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஏழு மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட டிசோ இயர்பட்ஸ் அறிமுகம்!
Published on

டிசோ பிராண்டின் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசோ பட்ஸ் Z பவர் என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த டிசோ பட்ஸ் Z ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். டிசோ பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை புதிய டிசோ பட்ஸ் Z பவர் மாடலில் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பூஸ்ட் பிளஸ் அல்காரிதம், 88ms லோ லேடன்சி மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. செமி இன்-இயர் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என்ற வகையில், இந்த மாடல் ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்களை கொண்டிருக்கிறது.

IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் டிசோ பட்ஸ் Z பவர் மாடலின் அம்சங்களை ஸ்டெம் பகுதியில் இருந்து இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் டிசோ பட்ஸ் Z பவர் மாடல் சார்ஜிங் கேஸ் சேர்த்து 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஒவ்வொரு இயர்பட்-ம் ஏழு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் இந்த இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்களுக்கு குயிக் சார்ஜ் செய்யும் போது மூன்று நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். லீஃப் கிரீன், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் பியல் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் டிசோ பட்ஸ் Z பவர் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com