35 மணி நேர பிளேபேக் வழங்கும் போல்ட் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
35 மணி நேர பிளேபேக் வழங்கும் போல்ட் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்
Published on

போல்ட் ஆடியோ நிறுவனம் மவெரிக் பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய போல்ட் ஆடியோ மவெரிக் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3, 45ms அல்ட்ரா-லோ லேடன்சி, அதிகபட்சமாக 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

இன்-இயர் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக உருவாகி இருக்கும் மவெரிக் பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர், பூம் எக்ஸ் சூப்பர் பேஸ் தொழில்நுட்பம் உள்ளது. இத்துடன் காம்பேட் கேமிங் மோட் உள்ளது. இந்த மோடில் இயர்பட்ஸ் 45ms வரை லேடன்சியை எட்டும். இதன் மூலம் கேமிங்கின் போது தலைசிறந்த அனுபவம் கிடைக்கும்.

வால்யும் மற்றும் பாடல்களை மாற்ற டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IPX5 சான்று உள்ளது. போல்ட் ஆடியோ மவெரிக் இயர்பட்ஸ்-இல் நான்கு மைக்ரோபோன்கள் உள்ளன. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கொண்ட போல்ட் ஆடியோ மவெரிக் அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.

போல்ட் ஆடியோ மவெரிக் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் போல்ட் ஆடியோ வலைதளங்களில் இன்று (செப்டம்பர் 15) முதல் துவங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com