ரூ. 899 விலையில் அறிமுகமான புது நெக்பேண்ட் இயர்போன்

போல்ட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த இயர்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
ரூ. 899 விலையில் அறிமுகமான புது நெக்பேண்ட் இயர்போன்
Published on

போல்ட் ஆடியோ FXசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. இது அழைப்புகளின் போது சுற்றத்தில் ஏற்படும் சத்தம், இரைச்சல்களை கேட்காமல் செய்யும்.

புதிய போல்ட் ஆடியோ FXசார்ஜ் மாடல் 14.2 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டுள்ளது. இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 32 மணி நேர பிளேபேக் வழங்கும்.

இந்த இயர்போன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், மேக் ஓஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள இன்லைன் கண்ட்ரோல்கள் மூலம் வால்யூம், மியூசிக் அட்ஜஸ்ட், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை செய்ய முடியும். இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் அம்சம் ஐந்து நிமிட சார்ஜிங்கில் ஏழு மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

விலை விவரங்கள்:

போல்ட் ஆடியோ FXசார்ஜ் நெக்பேண்ட் இயர்போன் அமேசான் தளத்தில் ரூ. 899 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com