பில்ட்-இன் ஸ்பீக்கர், சிறப்பான கனெக்டிவிட்டி கொண்ட ஏஒசி கேமிங் மானிட்டர் இந்தியாவில் அறிமுகம்

ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன.கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பில்ட்-இன் ஸ்பீக்கர், சிறப்பான கனெக்டிவிட்டி கொண்ட ஏஒசி கேமிங் மானிட்டர் இந்தியாவில் அறிமுகம்
Published on

ஏஒசி நிறுவனம் தொழில்முறை கேமர்களை குறிவைத்து, CU34G3S வளைந்த கேமிங் மானிட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏஒசி ஏகான் ப்ரோ 27 இன்ச் QHD 170Hz கேமிங் மானிட்டரை தொடர்ந்து, புதிய மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய கேமிங் மானிட்டர் 3440x1440 ரெசல்யூஷன், அகலமான குவாட் ஹெச்டி 165Hz ரிப்ரெஷ் ரேட், 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 34 இன்ச் அகலமான குவாட் ஹெச்டி வளைந்த டிஸ்ப்ளே, 21:9, VA டிஸ்ப்ளே தலைசிறந்த நிறங்களை அனைத்து கோணங்களில் இருந்து பார்க்கும் போதும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

இத்துடன் ஏஎம்டி ஃபிரீசின்க் பிரீமியம் டியர்-ஃபிரீ இமர்ஷன் தொழில்நுட்பம் தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது. இதன் மெல்லிய டிசைன் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு, ஃபிரேம்லெஸ் கேமிங் மானிட்டர் சிறப்பான விஷூவல் அனுபவத்தை வழங்குகிறது. கனெக்டிவிட்டிக்கு யுஎஸ்பி ஹப் 3.2, 2 டிஸ்ப்ளே போர்ட், 2 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பயனர்கள் தங்களது லேப்டாப், கேமிங் கன்சோல் அல்லது கேமிங் சிபியு உள்ளிட்டவைகளை எளிதில் இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டரில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது மியூசிக், கேமிங், பொழுதுபோக்கு உள்ளிட்ட பயன்பாடுகளின் போது, தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

ஏஒசி CU34G3S கேமிங் மானிட்டர் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் வலைதளத்தில் தற்போது இந்த மானிட்டர் ரூ. 41 ஆயிரத்து 090 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com