சீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் ‘சீதக்காதி’ படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Seethakathi #VijaySethupathi
சீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை தீபாவளிக்கு பிறகு நவம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தி ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

X

Maalai Malar
www.maalaimalar.com